அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் கலை திருவிழா இசைப் போட்டிகள்

குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காவது நாளாக கல்லூரி கலை திருவிழாவில் இசைப் போட்டிகள் நடந்தது;

Update: 2025-09-20 13:54 GMT
குமாரபாளையம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நான்காவது நாளாக கல்லூரி கலை திருவிழா கல்லூரி முதல்வர் சரவணா தேவி அவர்கள் தலைமையில் இசைப்போட்டிகள் நடந்தது. நேற்று தனிப்பாட்டு, குழு பாட்டு இசைக்கருவிகள் இசைத்தபடி பாட்டு, வாட்டர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களினால் இசை, இசையால் கதை சொல்லல், என்பது உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் நடந்தன. இதில் மாணவ, மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். நடுவர்களாக சென்னை ஸ்ருதியாலயம் சிவசுப்ரமணியன், ஈரோடு இசை ஆசிரியை ஹேமலதா, பவானி ஆத்ம நேசம் இசை மைய, ஆசிரியர் ரமேஷ் பங்கேற்றனர். போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவியரை முதல்வர் உள்ளிட்ட பேராசிரியர்கள், சக மாணாக்கர்கள் வாழ்த்தினார்கள்.

Similar News