டூவிலர் மீது அரசு டவுன் பஸ் மோதியதில் பள்ளி பஸ் ஓட்டுனர் படுகாயம், அரசு பஸ் ஓட்டுனர் கைது
குமாரபாளையம் அருகே டூவிலர் மீது அரசு டவுன் பஸ் மோதியதில், தனியார் பள்ளி பஸ் ஓட்டுனர் படுகாயமடைந்த நிலையில் அரசு பஸ் ஓட்டுனர் கைது செய்யப்பட்டார்.;
குமாரபாளையம் அருகே வீராட்சிபாளையம் பகுதியில் வசிப்பவர் சதாசிவம், 60. தனியார் பள்ளி பஸ் ஓட்டுனர். இவர் செப். 16ல், மதியம் வீட்டில் சாப்பிட்டு விட்டு, மீண்டும் வேலைக்கு போக , சேலம் கோவை புறவழிச்சாலை, பல்லக்காபாளையம் பிரிவு பகுதியில் சாலையை கடக்க டிவைடர் அருகே தனது, ஹீரோ ஹோண்டா சி.டி. 100 வாகனத்தில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வேகமாக வந்த எஸ்.2 எனும் அரசு டவுன் பஸ், இவரது வாகனம் மீது மோதியதில் பலத்த சதாசிவம் பலத்த காயமடைந்தார். இவர் சிகிச்சைக்காக ஈரோடு தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த குமாரபாளையம் போலீசார் , அரசு பஸ் ஓட்டுனர், பச்சாம்பாளையத்தை சேர்ந்த ராஜேந்திரன், 59, என்பவரை கைது செய்தனர்.