நின்று கொண்டிருந்த லாரி மீது டூவீலர் மோதியதில் கார்மெண்ட்ஸ் கூலித் தொழிலாளி படுகாயம்

குமாரபாளையம் அருகே நின்று கொண்டிருந்த லாரி மீது டூவீலர் மோதியதில் கார்மெண்ட்ஸ் கூலித் தொழிலாளி படுகாயமடைந்தார்.;

Update: 2025-09-20 14:29 GMT
தர்மபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஷ், 29. திருப்பூர் கார்மெண்ட்ஸ் கூலி. இவர் செப். 11ல், சொந்த ஊருக்கு வருவதற்காக தனது பஜாஜ், டூவீலரில், காலை 11:00 மணியளவில் சேலம் கோவை புறவழிச்சாலையில், அருவங்காடு அருகே வந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த டிரைலர் லாரி மீது, மோதியதில், வெங்கடேஷ் படுகாயமடைந்தார். இன்றுவரை சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News