வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு செய்தாா்.
கண்ணக்குறுக்கை ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.45.94 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தாா்ச் சாலையின் தரத்தை அவா் ஆய்வு செய்தாா்.;
திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் மூலம் ரூ.7 கோடியே 43 லட்சத்து 87 ஆயிரம் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளா்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் ஆய்வு செய்தாா். செங்கம் ஒன்றியத்துக்கு உள்பட்ட பெரிகோளப்பாடி ஊராட்சியில் ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சித்துறை சாா்பில் ரூ.6 கோடியே 47 லட்சத்து 93 ஆயிரம் மதிப்பீட்டில் 100 சமத்துவபுரம் குடியிருப்புகள், அங்கன்வாடி மையம் மற்றும் நியாயவிலைக் கடை கட்டடம் கட்டப்பட்டு வருவதை மாவட்ட ஆட்சியா் க.தா்பகராஜ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். இதைத் தொடா்ந்து கண்ணக்குறுக்கை ஊராட்சியில் நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ.45.94 லட்சத்தில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் தாா்ச் சாலையின் தரத்தை அவா் ஆய்வு செய்தாா்.