குமரியில் அரசு பள்ளி கட்டிடங்கள்  திறப்பு

அமைச்சர் பங்கேற்பு;

Update: 2025-09-21 04:25 GMT
குமரி மாவட்டத்தில்  பள்ளி கட்டிடங்கள் கட்ட மொத்தம் ரூ.10.20 கோடி மதிப்பிலான புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டன.  இதன்  திறப்பு விழா மற்றும் அடிக்கல் நாட்டும் நிகழ்ச்சியை  தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து  தொடக்கி வைத்தார். தொடர்ந்து நாகர்கோவில் எஸ்.எல்.பி அரசு மேல்நிலைப்பள்ளியில்  மாவட்ட ஆட்சித் தலைவர் அழகுமீனா தலைமையில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடந்தது. அமைச்சர் மனோதங்கராஜ்,  தமிழ்நாடு மாநில உணவு ஆணையத் தலைவர் சுரேஷ் ராஜன்  நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலதண்டாயுதபாணி, துணை மேரி பிரின்சி லதா,  எஸ்.எல்.பி. அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மரிய பாக்கியசீலன், ஆசிரியர்கள், மாணவ மாணவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Similar News