ஸ்ரீரங்கம் அருகே பசுமாடுகளை திருடும் மாநகராட்சி ஊழியர்கள்
நள்ளிரவில் தெருவுக்குள் வந்த மாநகராட்சி மாடுபிடிக்கும் ஊழியர்கள் இரண்டு மாடுகளின் கயிற்றை அவிழ்த்து ஓட்டிச்சென்றனர்.;
திருச்சி ஸ்ரீரங்கம் வீரேஸ்வரம் கீழத்தெருவை சேர்ந்த சகோதரர்கள் மனோஜ், சதீஷ். கறவை மாடுகள் வளர்க்கும் இவர்கள் பால் விற்பனை செய்து தங்களது வாழ்க்கையை கழித்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இவர்களின் வீட்டு வாசலில் கட்டிப் போட்டியிருந்த 2 கன்றுகள், ஒரு பசுமாடு அடுத்தடுத்து காணாமல் போயிருக்கின்றன. சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாட்டையும், கன்றுகளையும் மாநகராட்சி மாடுபிடிக்கும் பணியாளர்கள் பிடித்து சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், மாநகராட்சி சார்பில் பிடிக்கப்படும் மாடுகள் கட்டுமிடத்திலும் மாடு, கன்றுகள் இல்லை. மாடு பிடிக்கும் ஏலம் எடுத்த நபர், அவருக்கு பொறுப்பான அதிகாரிகளிடம் முறையிட்டும் எவ்வித பலனும் இல்லை. இந்நிலையில் சகோதரர்கள் இருவரும் நேற்றிரவு பசுமாடுகளை வீட்டின் முன்பு கட்டிவிட்டு தூங்கச் சென்றனர். நள்ளிரவில் தெருவுக்குள் வந்த மாநகராட்சி மாடுபிடிக்கும் ஊழியர்கள் இரண்டு மாடுகளின் கயிற்றை அவிழ்த்து அம்மா மண்டபம் சாலைக்கு ஓட்டிச்சென்றனர். அங்கு வைத்து இரண்டு மாடுகளையும் மாடுபிடிக்கும் வண்டியில் ஏற்றினர். இதுகுறித்து தெருவாசிகள் வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சகோதர்களை எழுப்பி தகவலை கூறினார். சம்பவ இடத்திற்கு விரைந்த இருவரும், 'தெருவுக்குள் அத்துமீறி நுழைந்து வீட்டின் முன்பு கட்டியிருந்த மாடுகளை எப்படி அவிழ்த்து செல்லலாம்' என்று மாடுபிடித்த ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். உடனே அவர்கள் ஸ்ரீரங்கம் போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். போலீஸார் நடத்திய விசாரணையில் அம்மா மண்டபம் சாலையில் மாடுகள் சுற்றித் திரிந்தற்கான எவ்வித ஆதாரமும் மாடு பிடித்தவர்களிடம் இல்லை என்பது ௺யூஅதையடுத்து மாடுகளை வண்டியில் இருந்து இறக்கிவிட உத்தரவிட்டனர். இதற்கிடையே மாகராட்சியில் மாடுபிடிக்கும் ஊழியர்கள் என்ற போர்வையில் திரியும் சிலர், விதிமுறைகளை மீறி வீட்டின் முன்பு கட்டி வைக்கும் மாடுகளை இரவோடு இரவாக திருடுகின்றனர். அந்த மாடுகளை மாடுகள் பராமரிக்கும் இடத்திற்கு கொண்டு செல்லாமல், இறைச்சிக்காக விற்றுவிடுகின்றனர் என்று பகிரங்கமாக குற்றம்சாட்டுகின்றனர். இவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி கடும் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கின்றனர்.