புளியங்குளத்தில் இலவச மருத்துவ முகாம்
புளியங்குளத்தில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது.;
செய்துங்கநல்லூர் அருகே உள்ள புளியங்குளத்தில் இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. தூத்துக்குடி மாவட்டம், செய்துங்கநல்லூர் அருகே புளியங்குளம் சமுதாய நலக்கூடத்தில் மேல ஆழ்வார் தோப்பு கிராம உதயம், தருவை வைகறை ஹோமியோபதி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் இணைந்து நடத்திய இலவச பொது மருத்துவ முகாம் நடந்தது. எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராஜ் தலைமை வகித்து முகாமை துவக்கி வைத்தார். தலைமை மருத்துவர் டாக்டர் துரைராஜ், கிராம உயதம் கிளை மேலாளர் வேல்முருகன், ஊர் தலைவர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். டாக்டர்கள் அசோகன், நந்தினி, பியூலா திலகவதி உள்பட மருத்துவ குழுவினர் மக்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்தனர். இந்த நிகழ்ச்சியில் தன்னார்வ தொண்டர் பிரேமா வரவேற்றார். பகுதி பொறுப்பாளர் ஆனந்த செல்வன் தொகுத்து வழங்கினார். புளியங்குளம் மையத் தலைவிகள் வள்ளியம்மாள், அனிதா, விஜயா, கல்யாணி, கோகிலா, அய்யம்மாள், இந்து மதி, கோமதி உள்பட பலர் கலந்துகொண்டனர். தன்னார்வ தொண்டர் ராமலெட்சுமி நன்றி கூறினார்.