குமரி மாவட்டம் காஞ்சாம்புறம் பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணகுமார் (55). பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவர் நேற்று பூத்துறை பகுதி முருகன் கோயில் முன் அதே பகுதியை சேர்ந்த கணவன் - மனைவி பிரச்சினை சம்பந்தமாக சமரசம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதி சேர்ந்த ஓமன் நாட்டில் லேப் டெக்னீசியனாக வேலை பார்க்கும் ரமேஷ் குமார் (46) என்பவர் கிருஷ்ணா குமாரை கத்தியால் குத்தினார். காயமடைந்த கிருஷ்ணகுமார் தனியார் மருத்துவமனை சிகிச்சை பெற்று வருகிறார். நித்திரவிளை போலீசார் வழக்கு பதிவு செய்து ரமேஷ் குமாரை கைது செய்தனர்.