பண்டாரம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது :

பண்டாரம்பட்டி பள்ளி தலைமை ஆசிரியருக்கு விருது : அமைச்சர் அன்பில் மகேஷ் வழங்கினார்;

Update: 2025-09-21 10:22 GMT
சென்னை வேல்ஸ் பல்கலைகழகம் சார்பில் தமிழ்நாடு முழுவதும் உள்ள சிறந்த ஆசிரியர்களை கண்டறிந்து அவர்களுக்கு விருது வழங்கும் விழா வேல்ஸ் பல்கலைகழக சிவாலயா அரங்கில் நடைபெற்றது. விழாவில் தூத்துக்குடி, பண்டாரம்பட்டி, தூ.நா.தி.அ.க. தொடக்கப் பள்ளி  தலைமையாசிரியர் நெல்சன் பொன்ராஜ் உட்பட 6பேருக்கு விருது வழங்கப்பட்டது.  வேல்ஸ் பல்கலைகழக நிறுவனர் ஐசரி கணேசன் முன்னிலையில், தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, விருதினை வழங்கினார். மேலும் சிறந்த ஆசிரியருக்கான விருது, சான்றிதழ் மற்றும் ரூ.30,000 மதிப்புள்ள ஆண்ட்ராய்டு டேப் வழங்கப்பட்டது. விருதுபெற்ற தலைமையாசிரியரை மாணவர்கள், முன்னாள் மாணவர்கள், ஊர் பொதுமக்கள் அனைவரும் பாராட்டினர்.

Similar News