தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்தாது ஏன்? அமைச்சர் கீதாஜீவன் கேள்வி!

தங்கம் விலையை மத்திய அரசு கட்டுப்படுத்தாது ஏன்? அமைச்சர் கீதாஜீவன் கேள்வி!;

Update: 2025-09-21 10:32 GMT
தங்கம் விலை விண்ணை முட்டும் அளவிற்கு சென்று கொண்டிருக்கிறது. இதை மத்திய அரசு கட்டுப்படுத்தாது ஏன்? என்று அமைச்சர் கீதாஜீவன் கேள்வி எழுப்பினார். தூத்துக்குடியில் வடக்கு மாவட்ட திமுக சாா்பில் ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளரும் சமூகநலன் மற்றும் மகளிர் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் தலைமை வகித்தாா். மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ, மாநகர செயலாளா் ஆனந்தசேகரன், மேயா் ஜெகன் பொியசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். தூத்துக்குடி வடக்கு மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினா் சோ்க்கையை சிறப்பாக செய்த ெதாகுதிக்கு 15 போ் வீதம் மொத்தம் 45 பேருக்கு சேலை வேஷ்டி ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கி தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம் என்ற உறுதிமொழியை எடுத்துக் கொண்டு அமைச்சர் கீதாஜீவன் பேசுகையில் "40 சதவீதம் மக்கள் தமிழ்நாட்டில் திமுகவின் ஓரணியில் தமிழ்நாடு என்ற திட்டத்தில் இணைந்துள்ளனா். காரணம் தமிழ்நாட்டின் பண்பாட்டை காப்பாற்ற வேண்டும் தமிழ்நாட்டின் கலாச்சாரத்தை காப்பாற்ற வேண்டும் என்பதற்காக இணைந்துள்ளனா். ஓன்றிய அரசு எவ்வளவு நெருக்கடி கொடுத்தாலும் தமிழகத்தில் திராவிட மாடல் ஆட்சி நடத்துகிறேன் என்று திமுக தலைவர் தமிழ்நாட்டை வழிநடத்துகிறாா். திராவிடம் என்ற வார்த்தையை சொன்னாலே சிலருக்கு பிடிக்கவில்லை. கீழடி அகழ்வாராய்சியில் 3 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் சமுதாயம் வீடு கட்டி வாழ்ந்துள்ளார் என்ற ஆய்வு முடிவுகள் பற்றிய தகவல்களை ஒன்றிய அரசுக்கு நான் ெகாடுத்துள்ளோம். ஆனால் அதனை மோடி அரசு அங்கீகரிக்கவில்லை. தமிழ் நாகரிகம் கீழடியில் தான் உருவாகியது. அதனை அங்கீகரித்தால் தமிழ் சமுதாயம் 3000 ஆண்டுகளுக்கு முன்பு உருவானது என்பது வெளியே தெரிந்துவிடும் என்பதற்காக அதனை அங்கீகரிக்கவில்லை. தமிழ்நாட்டில் தான் அதிக மருத்துவ கல்லூரி உள்ளது தமிழ்நாட்டில் தான் எனவே மருத்துவர்கள் எண்ணிக்கை குறைப்பதற்காக நீட் தேர்வை கொண்டு வந்து கிராமப்புறத்தில் இருக்கிற படித்த மாணவா்களை தடுக்கும் வீதமாகவும் பிற இடங்களில் ஆயிரம் மருத்துவர்களுக்கு மேல் கிடையாது என்பதால் மருத்துவ கல்வியை முடக்கும் நோக்கத்தில் நீட் தேர்வை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டியை குறைக்க பல ஆண்டுகளாக வலியுறுத்தினோம். அப்போது ஜிஎஸ்டி கவுன்சில் முடிவு செய்தது என்று கூறிய நிதி அமைச்சர் தற்போது ஜிஎஸ்டி வரியை நாங்கள் குறைத்து விட்டோம் என்று மார்தட்டி கொள்கின்றனர். மக்களுக்கு நல்லது தான் என்றாலும் கடந்த எட்டு ஆண்டுகளாக ஜிஎஸ்டி வரி மூலமாக மக்களை சுரண்டியது மத்திய அரசு என்று. தற்போது நான்கு மாநிலங்களில் தேர்தல் வருகிறது என்பதனால் மோடி அரசு ஜிஎஸ்டி வரியை குறைத்துள்ளது. மத்திய அரசு சுங்கச்சாவடி கட்டணங்களை உயர்த்தி உள்ளது சுங்கச்சாவடி கட்டணத்தை உயர்த்துவதால் லாாி வாடகை உயரும் அதன்மூலம் பால் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களின் விலைகள் உயரும். தங்க விலை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதனை கட்டுப்படுத்துவதற்கு மத்திய அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கோடீஸ்வரர்கள் பெரும் பண முதலாளிகளுக்கான திட்டங்களை தான் மத்திய அரசு எடுத்து வருகிறது. பாஜக என்ன செய்தாலும் தமிழ்நாடு பெரியார், அண்ணா, கருணாநிதி வாழ்ந்த மண் எனவே நாங்கள் ஓரணியில் தமிழ்நாடு என்ற வழியில் நாங்கள் ஒன்றிணைவோம். பிற மாநிலங்களில் சில கடன்களை ரத்து செய்த பாஜக அரசு தமிழகத்தில் கல்வி கடனை ரத்து செய்யவில்லை. பெரிய பெரிய தொழிலதிபர்களுக்கு கோடிக்கணக்கான கடன்களை தள்ளுபடி செய்த மத்திய அரசு தமிழக மாணவர்களின் நலனுக்காக கல்வி கடனை ரத்து செய்ய மறுப்பது ஏன் தமிழ்நாட்டில் தனிநபர் வருமானம் உயர்ந்துள்ளது. பொருளாதார வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொழில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதியில் தமிழகம் முதலிடம், மோட்டார் வாகன உற்பத்தி தமிழ்நாட்டில் அதிகம், வறுமை கோட்டுக்கு கீழ் உள்ளவர்கள் பட்டியல் எண்ணிக்கை தமிழகத்தில் குறைந்துள்ளது. வாக்குரிமை பற்றி கவலைப்படாத தமிழக அரசு பெற்றோர் இல்லாத பிள்ளைகளின் வாழ்வாதாரத்திற்காக தாயுமானவன் திட்டத்தின் கீழ் 2000 உதவி செய்கிறது. தமிழகத்தில் மகளிர் உரிமைத்தொகை கொடுக்கிறோம், பாலுக்கு ரூ3விலை குறைக்கப்பட்டுள்ளது. கொரோனா காலத்தில் எடப்பாடி எல்லாவற்றையும் அடைத்து மக்களையே முடக்கி போட்டாா். ஆனால் திமுக ஆட்சியில் ரேஷன் கடையின் மூலம் மக்களுக்கு நான்காயிரம் ரூபாய் வழங்கப்பட்டது. வணிக நிறுவனங்கள் திறக்கப்பட்டது அதன் மூலமாக பொருளாதார உயர்ந்தது. தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளத்தால் பல பகுதிகள் பாதிக்கப்பட்டன தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு அனைவரும் மீட்கப்பட்டது உப்பள தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வெள்ள நிவாரண நிதியுதவி வழங்கப்பட்டது. தமிழ்நாடு அரசு வளர்ச்சியை பெற்றுள்ளது அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத பாஜக அரசு இல்லாத குற்றச்சாட்டுகளை தமிழ்நாடு அரசு மீது சுமத்தி வருகிறது. திமுகவின் வாக்கு வங்கியை கலைப்பதற்காக பாஜக செயல்பட்டு வருகிறது. எடப்பாடி உள்துறை அமைச்சர் அமித்ஷாவை பார்க்க போவதை வெளிப்படையாக சொல்லாமல் முகத்தை மூடிக்கொண்டு சென்று வருகிறார். அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்து விட்டார். ஏற்கனவே பாஜகவிடம் அடகு வைத்ததால் தான் உதயம் மின் திட்டம், ஒரே நாடு ஒரே ரேசன் போன்ற மக்களை பாதிக்கும் திட்டங்கள் வந்துள்ளன. அதனால் தான் இன்று பல சோதனைகளை நாம் சந்திக்கு நோிடுகிறது. 2026 சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டை காப்பாற்ற வேண்டும். எல்லா மக்களும் முன்னேற, எல்லா பகுதியும் முன்னேற வேண்டும் என்ற கொள்கையை காப்பாற்ற வேண்டும். மக்களை காப்பாற்ற வேண்டும் என்றால் தமிழ் இனத்திற்கு எதிரானவர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக வாக்களிக்க வேண்டும். தமிழ்நாட்டை காப்பாற்ற தமிழக முதல்வர் மு க ஸ்டாலினை ஆட்சிகட்டில் அமர வைக்க் அனைவரும் சபதம் ஏற்று இந்த மாவட்டத்தில் உள்ள 3 தொகுதிகளிலும் வென்று முதலமைச்சர் காலடியில் சமாப்பிப்போம் என்று பேசினாா். ரஜினிக்கு பாராட்டு விஜய்க்கு குட்டு கூட்டத்தில் மாநில பேச்சாளர்கள் ஆண்டாள் பிாியதா்ஷினி, சரத்பாலா, இருதயராஜ், தமிழ்பிாியன், மாா்க்கன்டேயன் எம்.எல்.ஏ, உள்ளிட்ட பலர் பேசினர். மேயர் ஜெகன் பொியசாமி பேசுகையில் "கூட்டணியை பொறுத்தவரையில் தலைவர் பாா்த்துக்கொள்வாா் நாம் செய்ய வேண்டிய கடமை ஓவ்வொருவரும் 50 லிருந்து 100 வாக்குகள் சேகாித்தால் போதும் எதிா்கட்சிகளே இல்லை. என்ற நிலையை உருவாக்கலாம். மாநில பேச்சாளர் சரத்பாலா பேசுகையில் திமுகவை அழிப்பேன் ஓழிப்பேன் என்று பேசிய காமராஜா் பக்தவச்சலம் ராஜாஜி எம்.ஜிஆர் ஜெயலலிதா போன்றவா்களை எல்லாம் சந்தித்து விட்டு 76 ஆண்டில் வெற்றி நடை போட்டு கொண்டிருக்கும் திமுக இன்று உனக்கெல்லாம் பதில்சொல்ல வேண்டிய நிலையில் இருக்கிறோம். ஒரு படத்திற்கு 250கோடி வாங்கும் நீ நடித்த படம் ஓன்று 160 கோடிக்கு தான் விலை போகியுள்ளது. பாதிக்கப்பட்ட தயாாிப்பாளருக்கு ஏதுவும் நீ வழங்க வில்லை. இந்த லட்சனத்தில் தமிழகத்தை வழிநடத்த போகிறேன் என்ற நாடகம் எடுபடாது. அப்போதிலிருந்து இப்போது வரை சூப்பா் ஸ்டாராக வலம் வரும் ரஜினிகாந்த், தான் நடித்த படதயாாிப்பாளருக்கு நஷ்டம் ஏற்பட்டால் அவா் கஷ்டம் பட கூடாது என்பதற்காக அந்த பணத்தை கொடுத்து உதவி செய்வாா். இதுபோன்ற செயல்களில் யாா் உயா்ந்து நிற்கிறாா் என்று எண்ணி பாாக்க வேண்டும் என்று பேசினாா். கூட்டத்தில் தொகுதி பாா்வையாளர்கள் இன்பாரகு, பெருமாள், கணேசன், மாநில நெசவாளர் அணி துணை செயலாளர் வசந்தம் ஜெயக்குமாா், மீனவரணி துணைச்செயலாளர் புளோரன்ஸ், பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், சிறுபான்மை அணி துணை செயலாளர் பொன்சீலன், துணை மேயர் ஜெனிட்டா, நகா் மன்ற தலைவர் கருணாநிதி, மாவட்ட அவைத்தலைவர் செல்வராஜ், உள்பட பலா் கலந்து கொண்டனா்.

Similar News