தேசிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் – எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ வலியுறுத்தல்

கோவில்பட்டியில் தேசிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் – எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ வலியுறுத்தல்;

Update: 2025-09-21 14:38 GMT
கோவில்பட்டியில் நடைபெற்ற தமிழ்நாடு தீப்பெட்டி தொழில் நூற்றாண்டு விழாவில் முன்னாள் அமைச்சர், எம்.எல்.ஏ. கடம்பூர் ராஜூ பேசினார். தீப்பெட்டி தொழிலுக்கான ஜி.எஸ்.டி. வரி 18% இருந்து 5% ஆக குறைக்கப்பட்டதை குறிப்பிட்ட அவர், கோவில்பட்டியில் பஞ்சாலை தொழிலும் செழித்து வருவதால் இங்கு தேசிய ஜவுளி பூங்கா அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், நெல்லை-சென்னை வந்தே பாரத் ரெயில் கோவில்பட்டியில் நிறுத்தப்பட வேண்டும், தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து டெல்லி, மும்பை விமான சேவை தொடங்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தார். தீப்பெட்டிக்கு புவிசார் குறியீடு தரப்பட வேண்டும் என்றும் கூறினார். விழாவில் பா.ஜனதா மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தீப்பெட்டி தொழிலுக்கு மோடி அரசு வழங்கிய வரிவிலக்கு 1.5 லட்சம் தொழிலாளர்களுக்கு தீபாவளி பரிசு என பாராட்டினார். நிகழ்ச்சியில் தீப்பெட்டி உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகள், பா.ஜனதா நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Similar News