டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற பி.டி.ஓ. பலி
குமாரபாளையம் அருகே டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் ஓய்வு பெற்ற பி.டி.ஓ. பலியானார்.;
குமாரபாளையம் அருகே நேரு நகர் பகுதியில் சக்தி நகரில் வசிப்பவர் ஜெயராமன், 71. ஓய்வு பெற்ற பி.டி.ஓ. இவர் நேற்று காலை 11:00 மணியளவில். சேலம் கோவை புறவழிச்சாலை, கத்தேரி பிரிவு பஸ் நிறுத்தம் அருகே, டி. மார்ட் வணிக வளாகம் பகுதியில் டி.வி.எஸ். எக்ஸல் டூவீலரில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவருக்கு பின்னால் வேகமாக வந்த சுசுகி எஸ்கார்ட் கார் ஓட்டுனர், இவர் வந்த டூவீலர் மீது மோத, ஜெயராமன் படுகாயமடைந்தார். இவரை ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவ மனைக்கு அழைத்து வந்தனர். இவரை பரிசோதித்த டாக்டர், இவர் வழியில் இறந்து விட்டதாக கூறினார். விபத்துக்கு காரணமான கார் ஓட்டுனர் பிரகாஷ், 39, ஈரோடு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். பிரகாஷ், குமாரபாளையம் அருகே வளையக்காரனூர் பகுதியில் விசைத்தறி வைத்து தொழில் செய்து வருகிறார். குமாரபாளையம் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.