எடப்பாடி மீண்டும் முதல்வர் ஆவார்: ராஜேந்திர பாலாஜி பேட்டி!
எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதல்வர் ஆவார்: ராஜேந்திர பாலாஜி பேட்டி!;
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி விழாவை முன்னிட்டு மீனாட்சி அம்மன் கோவில் முன்பு மா விளக்கு பூஜை நடைபெற்றது. விழாவில் சிறப்பு விருந்தினராக அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில் "நடிகர் விஜய் மட்டுமல்ல யார் வந்தாலும் அதிமுக, இரட்டை இலைக்கு வழக்கக்கூடிய வாக்கு அதிமுகவிற்கு தான் விழும். 2026ல் திமுக ஆட்சிக்கு வரும் என்று முதல்வர் ஸ்டாலின் நம்பிக்கையுடன் இருப்பார். ஆனால் சூழ்நிலை திமுகவிற்கு எதிராக இருக்கிறது. அதிமுக வெல்ல போகிறது. எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக வரப்போகிறார் 2வது இடத்திற்கு திமுக, தவெக, சீமான் போட்டி போடுகிறார்கள். அதிமுகவுக்கு நிலையான இடத்தை அளிப்பதற்கு மக்கள் தயாராகி விட்டனர். அதிமுக பாஜக கூட்டணி தான் 2026 சட்டமன்ற தேர்தலில் வெல்லும் என்றார்.