விஸ்வகர்மா ஜெயந்தி விழா: மாட்டு வண்டி போட்டி!
விஸ்வகர்மா ஜெயந்தி விழா: மாட்டு வண்டி போட்டி நடைபெற்றது;
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் விஸ்வகர்மா ஜெயந்தி முன்னிட்டு விளாத்திகுளம் சுற்று வட்டார விஸ்வகர்மா மக்கள் மேம்பாட்டு சங்கம் சார்பில் சின்ன மாடு மற்றும் பூஞ்சிட்டு மாட்டு வண்டி எல்கை பந்தயம் நடைபெற்றது. இதில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர், தென்காசி, இராமநாதபுரம், தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 99 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. முதலாவதாக நடைபெற்ற சின்ன மாட்டு வண்டி பந்தயத்தில் 51 ஜோடி காளைகள் கலந்து கொண்ட இந்த மாட்டு போட்டி விளாத்திகுளம்- மதுரை சாலையில் நடைபெற்றது.இந்த போட்டியை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்கண்டேயன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பூஞ்சிட்டு மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பூஞ்சிட்டு மாட்டுவண்டி போட்டியில் 48 ஜோடி மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சின்ன மாட்டு வண்டி போட்டியில் முதல் பரிசை பரமசிவன் செமபுதூர், சீவலப்பேரி துக்காம்பிகா ஆகிய வண்டியும், இரண்டாம் பரிசு பரணி ஜெயம் ஜக்கம்மாள்புரம், சுரேஷ் -பாளையங்கோட்டை மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசு குப்பக்குறிச்சி, பூலாங்கால் மாட்டுவண்டியும் பெற்றன. விழாவின் முடிவில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளருக்கும் ஓட்டி வந்த சாரதிகளுக்கும் பரிசு தொகை, மற்றும் சால்வை அனுவித்து கவுரவிக்கப்பட்டனர்.