குளச்சல் நகராட்சி 18-ம் வார்டு நகர் மன்ற உறுப்பினரின் கோரிக்கையை ஏற்று பள்ளி ரோடில் அரசு உயர்நிலைப்பள்ளி இலப்ப விளை செல்லும் இடத்தில் பயணிகள் நிழற்கூடம் அமைக்க குளச்சல் சட்ட மன்ற உறுப்பினர் பிரின்ஸ் அடிக்கல் நாட்டினார். இந்நிகழ்ச்சியில் நகர்மன்ற தலைவர் நசீர், 18-ம் வார்டு நகர் மன்ற உறுப்பினர் ஸீனத் சாபி, நகர் மன்ற உறுப்பினர்கள் குறைஷா கலீல், கோமளா, மற்றும் அரசு தொடக்கப் பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியைக்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள், உட்பட பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.