குமரி மாவட்டம் பாலூர் பகுதியில் வசிப்பவர் ஆஸ்லின் (33). இவர் ஒரு தனியார் பள்ளியில் ஆசிரியர் . நேற்று முன்தினம் நாகர்கோவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் தனது பெரியம்மாவை பார்க்க குடும்பத்துடன் சென்றார். நேற்று வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்து 20 பவுன் நகைகள் மாயமாகி இருந்தன. இது சம்பந்தமாக கருங்கல் போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.