தென்பென்னை பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்

தென்பென்னை பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம்;

Update: 2025-09-22 08:08 GMT
திருப்பத்தூர் மாவட்டம் தென்பென்னை பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற கோரி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் ஆர்ப்பாட்டம் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகராட்சி பாரத ஸ்டேட் வங்கி எதிரில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் தென்பெண்ணை பாலாறு இணைப்பு திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும், திருப்பத்தூர் மாவட்டத்தில் பருவமழை காலதாமதமாக பெய்ததால் மேட்டு விளைச்சல் கம்பு சோளம்,கேழ்வரகு, சாமை உள்ளிட்ட மானாவாரி பயிர்களுக்கு ஏக்கருக்கு 15 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என கண்டன கோஷங்கள் எழுப்பி மாவட்ட செயலாளர் முல்லை தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ கட்சியின் மாவட்ட செயலாளர் நந்தி, மாவட்ட தலைவர் சாமிக்கண்ணு, மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர்கள் சுந்தரேசன், வேணுகோபால், வெங்கடேசன், சங்கர், தேவராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜோலார்பேட்டை ஒன்றிய செயலாளர் சங்கர் நன்றி கூறினார்.

Similar News