தனியார் நிறுவனத்தில் கூடுதல் பணம் பெற்று தருவதாககூறி டிபிஎஸ் வங்கி நகை மதிப்பீட்டாளர் மோசடி வங்கி முன் மண்ணெண்ணெய் ஊற்றிதற்கொலைக்கு முயன்றபட்டறை தொழிலாளி பரபரப்பு
திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் உள்ள டி பி எஸ் வங்கியில் நகை மதிப்பீட்டாளர் மணிகண்டன் நாராயணபாளையம் அருள்செல்வன் 37 என்பவரிடம் கூடுதல் பணம் பெற்று தருவதாக 42 பவுன் நகையை வாங்கி அடமானம் வைத்து திருப்பி கேட்ட போது கடனில் நகை மூழ்கிவிட்டதாக கூறிமோசடி நகை இழந்தவர் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு;
திருச்செங்கோடு அருகே உள்ள நாராயண பாளையம் பகுதியை சேர்ந்தவர் அருள் செல்வன் 37. லாரி பட்டறையில் வேலை செய்து வரும் இவருக்கு நகராட்சியில் தூய்மை பணியாளராக வேலை செய்யும் சித்ரா என்ற மனைவியும், +2 படிக்கும் ஒரு பெண் குழந்தையும், ஏழு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இவர் தனது மனைவி மற்றும் தனது தம்பி கார்த்தி ஆகியோருடைய சுமார் 42 பவுன் நகைகளை திருச்செங்கோடு சங்ககிரி ரோட்டில் உள்ள டி.பி.எஸ் (DBS) வங்கியில் அடமானம் வைத்துள்ளார். திடீரென இவருக்கு பக்கவாத நோய் ஏற்பட்டதால் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாத நிலையில் அடமானம் வைத்த நகைகளின் மீது கூடுதல் பணம் கேட்டுள்ளார். அப்போது வங்கியில் கூடுதல் பணம் தர இயலாது எனக் கூறியுள்ளனர். இதனைத் தொடர்ந்து வங்கியில் நகை மதிப்பீட்டாளராக வேலை செய்யும் மணிகண்டன் என்பவர் அடமானம் வைத்துள்ள நகையை மீட்கவும் கூடுதலாக பணம் பெறவும் தனியார் நிறுவனங்கள் உள்ளது எனவும், அந்த நிறுவனங்களில் அடமானம் வைத்தால், வட்டி மட்டும் கொஞ்சம் அதிகமாகும் மற்றபடி பணம் அதிகமாக கிடைக்கும் என கூறியதை தொடர்ந்து, மணிகண்டனின் பேச்சை நம்பி 42 பவுன் நகையையும் தனியார் நிறுவனத்தில் அடகு வைத்துள்ளனர். ஆறு மாதம் வட்டி கட்டாத நிலையில் நகை கடனில் மூழ்கிவிடும் என்று மணிகண்டன் கூறியதை அடுத்து அருள்செல்வனின் தம்பி கார்த்தி எவ்வளவு பணம் ஆனாலும், எவ்வளவு வட்டியானாலும் நான் பணத்தை திருப்பி கொடுத்துவிடுகிறேன். நகை வேண்டும் என ஒரு கட்டத்தில் கேட்கும்போது, மணிகண்டன் நகை முழுகி விட்டதாகவும், நகையை பெற இயலாது. என்ன செய்ய முடியுமோ? செய்து கொள்ளுங்கள் என கூறியதாகவும் கூறப்படுகிறது. 42 பவுன் நகையை இழந்த சோகத்தில் இருந்த அருள் செல்வன், இன்று திடீரென மணிகண்டன் வேலை செய்யும் டி.பி.எஸ் வங்கி முன் வந்து தன்னுடன் கொண்டு வந்திருந்த மண்ணெண்ணய் கேனில் இருந்து தலையில் மண்ணெண்ணயை ஊற்றிக்கொண்டு எனது நகையை திருப்பிக் கொடுங்கள் என கூச்சலிட்டார். இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று அவரை காப்பாற்றி போலீசுக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த திருச்செங்கோடு நகர போலீசார் விரைந்து சென்று அருள்செல்வனை மீட்டு உடலில் தண்ணீரை ஊற்றினர். இதனால் சங்ககிரி ரோடு பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. ஏராளமான சம்பவ இடத்தில் ஏராளமான பொதுமக்கள் திரண்டதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து அருள்செல்வனைகாவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் சம்பவம் குறித்தும், நகை குறித்தும் விசாரணை செய்து வருகின்றனர். பவுன் விலை 85 ஆயிரத்தை எட்டியுள்ள நிலையில், 42 பவுன் மோசடி செய்யப்பட்டு விட்டதாக கூறி மனமுடைந்த அருள்செல்வன் தீக்குளிக்க முயன்ற சம்பவம் அப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.