ராசிபுரம் அருகே இந்து சமய அறநிலைத்துறை உட்பட்ட நிலத்தில் குளறுபடி நடந்ததாக கிராம மக்கள் குற்றச்சாட்டு. நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட கிராம மக்கள்..

ராசிபுரம் அருகே இந்து சமய அறநிலைத்துறை உட்பட்ட நிலத்தில் குளறுபடி நடந்ததாக கிராம மக்கள் குற்றச்சாட்டு. நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளை சூழ்ந்து கொண்ட கிராம மக்கள்..;

Update: 2025-09-23 14:06 GMT
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த கட்டனாச்சம்பட்டி பகுதியில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்டு 3ஏக்கர் பரப்பளவில் நிலமானது உள்ளது.இந்த நிலத்தில் அப்பகுதியை சேர்ந்த மக்கள் புதிதாக கோவில் கட்டிய வழிபாடு செய்து வருகின்றனர். தற்போது அங்கு உள்ள நிலத்தை அளவீடு செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்ட நிலையில் தற்போது அந்த நிலத்தை அளவீடு செய்ய அதிகாரிகளுக்கு நீதிமன்றமானது உத்தரவிட்டது.நீதிமன்ற உத்தரவுபடி அதிகாரிகள் அளவீடு செய்வதற்காக அந்த நிலத்திற்கு சென்ற போது அங்கு கிராம மக்கள் இந்து சமய அறநிலைத்துறை நிலத்தில் குளறுபடி நடைபெற்றதாக கூறினர். தொடர்ந்து அதிகாரிகள் கிராம மக்களிடம் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில் கிராம மக்களுக்கும்,அரசு அதிகாரிகள், காவல்துறையினருக்கும் இடையே கடும் வாக்குவாதமானது ஈடுபட்டது.பின்னர் காவல் துறையினர் சமரசம் பேசி பின்னர் நில அளவீடு செய்வதற்கு முடிவு செய்தனர்.பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீட்டாளர்கள் நிலத்தை அளவீடு செய்து பணியை முடித்தனர். உயர்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பெயரில் நில அளவீடு செய்ய சென்ற அதிகாரிகளை கிராம மக்கள் தடுத்து நிறுத்தி வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது...

Similar News