தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்கு உள்ளான கார்
கொடைக்கானல் மலைச்சாலையில் அதிவேகமாக முன் சென்ற வாகனத்தை முந்தியதால் ஓட்டுநரை கட்டுப்பாட்டை இழந்து தடுப்புச் சுவர் மீது மோதி விபத்துக்கு உள்ளான கார் சிசிடிவி வைரல்;
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலுக்கு பல்வேறு மாநிலங்கள் மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமான ஒன்றாகும் இந்த நிலையில் நாகர்கோவிலில் இருந்து கொடைக்கானலுக்கு சுற்றுலா வந்த வாகனம் வத்தலகுண்டு கொடைக்கானல் பிரதான மலைச்சாலையில் பெருமாள் மலைப் பகுதியில் முன்னாள் சென்ற வாகனத்தை முந்தி செல்லும் போது ஓட்டுநர் கட்டுபாட்டை இழந்த வாகனம் .சாலை ஓரத்தில் உள்ள தடுப்புசுவரை உடைத்துக் கொண்டு அந்தரத்தில் தொங்கி விபத்துக்கு உள்ளானது இந்த விபத்தை கண்ட அப்பகுதி மக்கள் பள்ளத்தில் விழுந்த வாகனத்தில் இருந்த சுற்றுலாப் பயணிகளை சிறு காயங்களுடன் மீட்டு கொடைக்கானல் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர் இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.