பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி

பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி 27-09-2025 அன்று மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெறவுள்ளது மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் தகவல்;

Update: 2025-09-25 12:54 GMT
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திண்டுக்கல் பிரிவில் 2025-26 ஆம் ஆண்டிற்கான பேரறிஞர் அண்ணா பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடும் பொருட்டு மாவட்ட அளவிலான பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பேரறிஞர் அண்ணா மிதிவண்டி போட்டி 27-09-2025 அன்று காலை 7.00 மணிக்கு மாவட்ட விளையாட்டரங்கத்தில் கீழ்காணும் பிரிவின்படி நடைபெற உள்ளது. மேலும் இப்போட்டிகளில் ஒவ்வொரு பிரிவுகளிலும் முதல் இடம் பெறுபவர்களுக்கு ரூ.5000/-, 2-ஆம் இடம் ரூ.3000/- , 3-ஆம் இடம் ரூ. 2000/- மும் மற்றும் 4 முதல் 10-ஆம் இடம் பெறுபவர்களுக்கு ரூ.250/- வீதம் பரிசு தொகை (காசோலையாக) மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், மாவட்ட விளையாட்டரங்கம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், தாடிக்கொம்பு ரோடு, திண்டுக்கல் - 624 004, அலைபேசி எண் – 7401703504 என்ற முகவரியை தொடர்பு கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் சரவணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

Similar News