திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அருகில் அதிக சத்தத்துடன் உயர் மின்னழுத்த மின்கம்பியில் கடந்த ஒரு வாரமாக தீ கொழுந்து விட்டு எரிந்து வருகிறது. இதனையடுத்து இன்று அதிக சத்தத்துடன் தீ கொழுந்து விட்டு எரிந்தது. இதனால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளதால் மின்சாரத் துறையினர் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள், வாகன ஓட்டிகள் காலையில் இருந்து கோரிக்கை வைத்துள்ளனர்.