உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா நேரில் ஆய்வு
உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா நேரில் ஆய்வு;
அருப்புக்கோட்டை நகராட்சியில் நடைபெற்ற கடைசி உங்களுடன் ஸ்டாலின் முகாமில் மாவட்ட ஆட்சித் தலைவர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்து பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பதிவு செய்யும் பணிகள் குறித்து அதிகாரிகளிடமும் பொதுமக்களிடமும் கேட்டறிந்தார் விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை நகராட்சியில் கடந்த சில நாட்களாக உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் வார்டு வாரியாக நடைபெற்று வந்தது. அருப்புக்கோட்டை நகராட்சியில் மட்டும் மொத்தம் 15 முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று 15 வது மற்றும் கடைசி முகாம் அருப்புக்கோட்டை நகராட்சியில் உள்ள மீனாட்சிபுரம் தெருவில் தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. இந்த முகாமில் வீட்டு வசதி மற்றும் நகர்புற வளர்ச்சித்துறை, சிறுகுறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை, நகராட்சி நிர்வாகம், மின்வாரியம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை உள்ளிட்ட பல்வேறு துறை அரங்குகள் அமைக்கப்பட்டு பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்பட்டது. இந்நிலையில் இந்த முகாமில் விருதுநகர் மாவட்ட ஆட்சி தலைவர் சுகபுத்ரா நேரில் ஆய்வு செய்தார். அப்போது ஒவ்வொரு அரங்குகளாக ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பதிவு செய்யும் பணிகள் குறித்து அதிகாரிகளிடமும் பொதுமக்களிடமும் கேட்டறிந்தார். மேலும் இந்த முகாமில் பதிவு செய்த பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. இந்த முகாமில் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.