ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய செந்நெல்குளம் கிராமத்தில் சமுதாய கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தடையை மீறி காத்திருப்பு
ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய செந்நெல்குளம் கிராமத்தில் சமுதாய கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தடையை மீறி காத்திருப்பு போராட்டத்திற்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளால் பரபரப்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்...*;
விருதுநகர் மாவட்டம் ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே பழைய செந்நெல்குளம் கிராமத்தில் சமுதாய கூடம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து வட்டாட்சியர் அலுவலகத்தில் தடையை மீறி காத்திருப்பு போராட்டத்திற்கு செல்ல முயன்றவர்களை போலீசார் தடுத்ததால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளால் பரபரப்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்... விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஊராட்சி ஒன்றியம் பி.ராமச்சந்திராபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பழைய செந்நெல்குளம் கிராமத்தில் கூட்டுறவு பால்பண்ணை மற்றும் கோயில் அருகே உள்ள அரசு புறம்போக்கு நிலத்தில் நமக்கு நாமே திட்டத்தில் ரூ.30 லட்சம் மதிப்பில் சமுதாய கூடம் கட்டுவதற்கு திட்டமிடப்பட்டது. இதற்கு அஸ்திவாரம் அமைக்க பள்ளம் தோண்டிய நிலையில், அப்பகுதி மக்கள் சமுதாய கூடம் கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். மாற்று இடத்தில் சமுதாய கூடம் கட்ட வலியுறுத்தி செப்டம்பர் 26-ம் தேதி காலை ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்த நிலையில், ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகம் செல்ல முயன்றவர்களை பழைய செந்நெல்குளத்தில் போலீஸார் தடுத்து நிறுத்தியதால், ஶ்ரீவில்லிபுத்தூர் ஆலங்குளம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்களை போலீஸார் அப்புறப்படுத்த முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது. வட்டார வளர்ச்சி அலுவலர் சிவகுமார், இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் பேச்சுவார்த்தை நடத்தினர். போரட்டத்தை கைவிட்ட பொதுமக்கள் சனிக்கிழமை மாலை ராஜபாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர்.