புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தனியார் தொலைக்காட்சி நிருபருக்கு போலி நிருபர் பழனியப்பன் நேற்று கொலை மிரட்டல் விடுத்தார். இதனை அடுத்து பொதுமக்கள் அவரை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதனை தீர விசாரித்த காவல்துறையினர் போலி நிருபர் பழனியப்பனை 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.