புதுக்கோட்டை மாவட்டம் பழைய கந்தர்வகக்கோட்டையை சேர்ந்தவர் ரவிச்சந்திரன் (55). இவர் ரெகுநாதபுரம் பெட்ரோல் பங்க் அருகே,சட்டவிரோத மதுபான பாட்டில்கள் விற்பனை செய்து கொண்டிருந்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ரெகுநாதபுரம் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடமிருந்து 28 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.