திருமயம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அருகே கடைவீதி செல்லும் சாலையில் உள்ள தெருவிளக்கானது கடந்த சில நாட்களாக பழுதடைந்து நிலையில் இருந்தது. இப்பகுதி முழுவதும் இருள் சூழ்ந்து காணப்படுவதால் இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகளும் பொதுமக்களும் பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இதற்கு உடனடி நடவடிக்கை எடுத்து திருவிளக்கை பழுது நீக்கம் செய்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்,.