ஆலங்குடி: நேர பிரச்சினையை காரணம் காட்டி தனியார் பஸ் ஓட்டுனர்கள் வாக்குவாதம்
பொது பிரச்சனைகள்;
ஆலங்குடி நகரில் பேருந்து நிலையம் செல்லும் பிரதான ஒரு வழிப்பாதையில் நேற்று இரவு இரண்டு தனியார் பேருந்துகளுக்கு இடையே நேரப் பிரச்சினையைக் காரணம் காட்டி வடகாடு செல்லும் தனியார் பேருந்தின் ஓட்டுனர் சாலையின் குறுக்கே பேருந்தை நிறுத்தியதில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக பொதுமக்கள் கடும் அவதி அடைந்து செல்லும் சூழல் நிலவி வருகிறது.