முன்னாள் முதல்வர் சுப்பராயன் குறித்து விஜய் நாமக்கல் பிரச்சாரத்தில் பேசியதற்கு மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பதில்

முன்னாள் முதல்வர் சுப்பராயன் குறித்து விஜய் நாமக்கல் பிரச்சாரத்தில் பேசியதற்கு மாநிலங்களவை உறுப்பினர் கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் பதில்;

Update: 2025-09-27 15:58 GMT
தமிழக வெற்றி கழகத் தலைவர் விஜய் எழுதிக்கொடுத்ததை வைத்துக்கொண்டு தெரியாமல் பேசக்கூடாது.தெரிந்து பேசவேண்டும் என மாநிலங்களவை உறுப்பினரும், நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார் எம்பி., தெரிவித்துள்ளார். தவெக தலைவர் விஜய் நா மக்கல்லில் சனிக்கிழமை நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்றுப் பேசினார். அப்போது நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த முன்னாள் சென்னை மாகாண முதலமைச்சர் டாக்டர் சுப்பராயனுக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக தெரிவித்திருந்தது. ஆனால் அதனை திமுக செய்யவில்லை என குற்றம்சாட்டியிருந்தார். மேலும் மாவட்டத்தில் கோழிப்பண்ணைகளுக்கான முட்டை சேமிப்பு குளிர்பதன கிடங்கு, லாரி தொழிலுக்கு தேவையான வசதிகளை தேர்தல் வாக்குறுதிபடி திமுக அரசு செய்யவில்லை என தெரிவித்திருந்தார். இதனையடுத்து, இதற்கு பதிலளிக்கும் வகையில் நாமக்கல் கிழக்கு மாவட்ட திமுக செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான கே.ஆர்.என்.ராஜேஸ்குமார், சேலம்-நாமக்கல் இடையே புதுசத்திரம் பகுதியில் கட்டிமுடிக்கும் தருவாயில் உள்ள டாக்டர் சுப்பராயன் மணிமண்டபத்தை செய்தியாளர்களுடன் பார்வையிட்டு சுற்றிக்காண்பித்து, பேட்டியளித்தார். அப்போது கூறிய அவர், இட ஒதுக்கீட்டை பெற்றுத் தந்த திருச்செங்கோட்டை சேர்ந்த சென்னை மாகாண முன்னாள் முதல்வர் டாக்டர் சுப்பராயன் அவர்களுக்கு மணி மண்டபம் கட்டும் பணியை நிறைவேற்றவில்லை என குற்றம் சாட்டி விஜய் பேசி இருந்தார். டாக்டர் சுப்பராயனுக்கு பெங்களூர்-கன்னியாகுமரி சாலையில் புதுசத்திரம் பகுதியில் சுமார் 1.5 ஏக்கர் பரப்பில் ரூ. 2.5 கோடி மதிப்பில் மணி மண்டபமும், மார்பளவு சிலையும் அமைக்கப்படும் என தமிழக முதல்வரால் அறிவிக்கப்பட்டு, தற்போது 90 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளன. விரைவில் அவரது மார்பளவு சிலை நிறுவப்பட்டு தமிழக முதல்வரால் திறந்த வைக்கப்படவுள்ளது. இந்த உண்மை தெரியாமல் விஜய் பேசி இருக்கிறார். யாரோ தவறாக எழுதிக் கொடுத்துள்ளதை வைத்துக்கொண்டு அவர் தெரியாமல் பேசியுள்ளார். விஜய் பேச்சு முழு பூசணிக்காயும் சோற்றில் மறைப்பது போல் உள்ளது. ஏதையும் தெரிந்து பேச வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மணிமண்டபத்தை விஜய் ஒரு முறை வந்து பார்த்துவிட்டு செல்ல வேண்டும் என்றார். மேலும், கோழிப்பண்ணை, முட்டை உற்பத்தி தொழிலுக்கு குளிர்பதன சேமிப்பு கிடங்கு அமைக்கப்படவில்லை என கூறியிருந்தார். நாமக்கல் மாவட்டத்தில் கோழிப்பண்ணை தொழிலுக்கு வித்திட்டவர் முன்னாள் கருணாநிதி தான். சத்துணவுவில் முட்டை சேர்க்கப்பட்டு தொழிலை விரிவுப்படுத்தினார். இந்த தொழில் வளர்ச்சிக்கு திமுக அரசு தான் காரணம். இதே போல் முட்டை சேமிப்பு குளிர்பதன கிடங்கு அரசு மான்யத்துடன், தனியார் பங்களிப்போடு உள்ளது. அதனை இப்போதும் பார்வையிடலாம். எனவே விஜய்-க்கு எழுதிக்கொடுப்பவர்கள் உண்மை நிலையை கண்டறிந்து எழுதிக்கொடுக்க வேண்டும் என்றார். நாமக்கல் சட்டபேரவைத் தொகுதி உறுப்பினர் பெ.ராமலிங்கம் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Similar News