வல்லத்திராக்கோட்டை விநாயகர் கோவில் சந்தன காப்பு திருவிழாவை முன்னிட்டு, இன்று மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது. இதில் பல்வேறு பகுதிகளிலிருந்து வந்த மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன. சாலையில் துள்ளி குதித்து ஓடும் மாட்டு வண்டிகளை சாலையின் இருபுறமும் நின்று பொதுமக்கள் கண்டு ரசித்தனர். இறுதியில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்களுக்கு கோப்பைகள் மற்றும் ரொக்கப்பணம் பரிசாக வழங்கப்பட்டது.