புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் அடுத்த கோட்டப்பள்ளத்தை சேர்ந்தவர் கணேசன் (34) இவருக்கும் அவரது மனைவி நிஷாந்தி(34). இருவருக்கும் ஏற்பட்ட குடும்பச் சண்டையில் அவரது மனைவி நிஷாந்தி மீது ஏற்பட்ட மனக்கசப்பு காரணமாக கணேசன் மது போதையில் வீரடிவயலில் உள்ள அவரது உறவினர் வீட்டில் விஷம் அருந்தி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவரது மனைவி அளித்த புகாரில் கீரனூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.