புதுக்கோட்டை மாவட்டம் மழையூரில் வேலன் (75) என்ற முதியவர் மழையூர் கடைவீதி சாலையை கடக்க முயன்றுள்ளார். அப்போது அவருக்கு பின்னால் வந்த அடையாளம் தெரியாத பைக் மோதியதில் முதியவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து, அவர் அளித்த புகாரில் மழையூர் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.