கீழப்பனையூரில் பைக்குகள் மோதி கொண்ட விபத்தில் ஒருவர் படுகாயம்!
விபத்து செய்திகள்;
புதுக்கோட்டை மாவட்டம் கீழப்பனையூரிலிருந்து அரிமளத்திற்கு கருப்பையா(67) என்பவர் பைக்கில் சென்றுள்ளார். அப்போது கீழப்பனையூர் திருமண மஹால் அருகே உள்ள சாலையில் அவருக்கு பின்னால் பைக்கை ஓட்டி வந்த நபர் மோதியதில் கருப்பையாவிற்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு மிகவும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். லட்சுமணன் என்பவர் அளித்த புகாரில் அரிமளம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.