திருமயம் அடுத்த அரிமளத்தை தனி தாலுகாவாக அறிவிக்கக் கோரி தமிழக அரசை வலியுறுத்தி இன்று உண்ணாவிரத போராட்டம் நடைபெற்று வருகிறது. இதில் அரிமளம் சுற்றுவட்டார பொதுமக்கள் கலந்து கொண்டுள்ளனர். அரிமளத்தை தனி தாலுகாவாக அறிவித்தால் இதன் மூலம் பல்வேறு வேலைவாய்ப்புகளும், பொருளாதார பெருக்கம் ஏற்பட்டு மக்களின் வாழ்வு மேம்படும் என்பது இப்பகுதி மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.