பென்னாகரத்தில் இன்று மின்நிறுத்தம்
மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் பென்னாகரத்தில் இன்று மின்நிறுத்தம் அறிவிப்பு;
பென்னாகரம் 110/33/11 கிலோ வோல்ட் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணியும், நெடுஞ்சாலை துறை மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் சாலை விரிவாக்க பணி நடைபெறுவதால், இடையூராக உள்ள மின் கம்பங்களை மாற்றி அமைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால் பென்னாகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் பெரும்பாலை, ஏரியூர், ஒகேனக்கல்,பி. அக்ரகாரம், நாகதாசம்பட்டி, பாப்பாரப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் (செ.29) இன்று திங்கட்கிழமை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின் நிறுத்தம் அமலில் இருக்கும் என செயற் பொறியளர் தெரிவித்துள்ளார்.