முன்னாள் அமைச்சர் தலைமை புத்தக வெளியீட்டு விழா

தருமபுரியில் ஏழாம் ஆண்டு புத்தகத் திருவிழாவில் மேற்கு மாவட்ட திமுக செயலாளர் பழனியப்பன் புதிய நூல்களை வெளியிட்டார்.;

Update: 2025-09-29 02:14 GMT
தர்மபுரி பாரதிபுரத்தில் ஏழாம் ஆண்டு புத்தகத் திருவிழா விமரிசையாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணி அளவில் மேற்கு மாவட்ட திமுக மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர் முனைவர் கவிதா எழுதிய வானத்து வாசலிலே என்ற நூலை முன்னாள் அமைச்சரும் மேற்கு மாவட்ட செயலாளருமான பழனியப்பன் வெளியிட கவிஞர் அன்பு தீபன் பெற்றுக்கொண்டார். இந்த நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குனர் கரு.பழனியப்பன், கவிஞர் மனுஷ்ய புத்திரன், மரு.செந்தில் மற்றும் மேடை பேச்சாளர்கள் கலந்து கொண்டனர்.

Similar News