ஆலங்குடி அருகே உள்ள K.ராசியமங்கலம் பகுதியில் புனித அந்தோணியார் ஆலய அமைந்துள்ளது. இந்நிலையில் அந்தோணியார் ஆலயத்தில் 2025-ம் ஆண்டு திருவிழா கொடியேற்றம் விழா தொடங்கி நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அருட்தந்தை அந்தோணிசாமி அவர்களால் புனிதம் செய்து, நேற்று இரவு ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. இதில் அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமனோர் கலந்து கொண்டு சிறப்பு வழிபாட்டில் ஈடுபட்டனர்.