புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான குறைதீர்க்கும் முகாம் இன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டமாவட்ட ஆட்சியர் அருணா மாற்றுத்திறனாளிகள் அமர்ந்திருக்க கூடிய இடத்திற்கு நேரடியாக சென்று கோரிக்கை மனுக்களை பெற்றார். மேலும் பெறப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.