புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீரனூர் அருகே உள்ள ஈச்சங்குடி கிராமத்தில் சுமார் 100 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். கடந்த 30 ஆண்டு காலம் வீட்டுமனை பட்டா வழங்கவில்லை என ஊர் மக்கள் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு ஒன்று திரண்டு வந்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.