போலி லாட்டரி விற்ற வழக்கில் இருவர் கைது
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்ற வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டனர்.;
குமாரபாளையத்தில் போலி லாட்டரி விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் தவமணி, எஸ்.ஐ. நடராஜ் தலைமையிலான போலீசார் தீவிர ரோந்து பணி மேற்கொண்டனர். குமாரபாளையம் ராஜா வீதி பழைய சவுண்டம்மன் கோவில் பகுதி, ஆனங்கூர் பிரிவு ஆகிய பகுதியில் போலி லாட்டரி விற்பது தெரியவந்தது. நேரில் சென்ற போலீசார், வெள்ளை காகிதத்தில் நம்பர்கள் எழுதி, அதனை வெளி மாநில பரிசு சீட்டு என்று பொய் சொல்லி, போலி லாட்டரி விற்றுக்கொண்டிருந்தனர். நேரில் சென்ற போலீசார், கார்த்தி, 33, வடிவேல், 47, ஆகிய இருவரை குமாரபாளையம் போலீசார் கைது செய்து, போலி லாட்டரி டிக்கெட்டுக்களை பறிமுதல் செய்தனர்.