ராசிபுரம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம் ...
ராசிபுரம் நகராட்சியின் மாதாந்திர கூட்டம்..;
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் நகர மன்ற கூட்டம் நகராட்சி தலைவர் கவிதா சங்கர் தலைமையில் நடைபெற்றது. நகராட்சி ஆணையாளர் கோபிநாத், நகர மன்றத் துணைத் தலைவர் கோமதி ஆனந்த் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இதில் நகர மன்ற உறுப்பினர்கள், மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டார்கள். இந்த கூட்டத்தில் பல்வேறு பொருட்கள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதில் நகர மன்ற தலைவர் பேசும்போது.. ராசிபுரம் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள வணிக வளாகம் வாடகை நிர்ணயம் செய்து கொண்டு வருவது, வார சந்தையில் குத்தகை இனம் நிர்ணயம் செய்வது. அறிவுசார் மையம் அமைக்க நகராட்சி இடம் ஒதுக்குவது. தொகுதியின் அமைச்சர் மற்றும் மாநிலங்களவை உறுப்பினரின் முயற்சியால் நகராட்சி பகுதியில் மினி ஸ்டேடியம் அமைக்க மன்றம் அனுமதிப்பது. நகராட்சி பகுதியில் அங்கன்வாடி மையங்கள் அமைக்க ஒப்புதல் அளிப்பது. நகராட்சி பகுதியில் தமிழக அரசின் முகாம்கள் நடத்தப்பட்டு பொதுமக்களின் மனு நிவர்த்தி செய்யப்பட்டு வருவது. இதில் வருவாய் பிரிவு மட்டும் மனுக்களை தேர்வு காணாமல் மற்ற அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி தினசரி மார்க்கெட் 2023 ஆம் ஆண்டு ஒப்பந்தமிடப்பட்டு ஆறு கடைகளுக்கு மட்டுமே ஒப்பந்தம் டெபாசிட் கொடுத்துள்ளார்கள் மற்ற கடைகளுக்கு உரிய நகராட்சி தொகையினை செலுத்தவில்லை அந்த கடைகளுக்கு மீண்டும் டெண்டர் விட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் நகராட்சி பகுதியில் நகரமைப்பு, சட்டப்பிரிவு வங்கியில் எந்த கட்சிகளாக இருந்தாலும் முறையான அனுமதி பெற்று நகராட்சி பகுதியில் பிளக்ஸ் பேனர்கள் தட்டிகள் வைக்க வேண்டும் அவ்வாறு வைக்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் நகராட்சியில் இருந்து கடிதங்கள் அனுப்பி இனி வரும் காலங்களில் பொதுமக்களுக்கும் வணிகர்களுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் வைக்க நகராட்சியில் நடவடிக்கை எடுக்கும். அனைத்து நகர மன்ற உறுப்பினர்களும் அரசியல் கட்சியினரும் பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது. கடந்த கூட்டத்தில் நகர்மன்ற உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்று தெரு நாய்களுக்கு தற்போது ரேபிஸ் நோய் தடுப்பு ஊசிகள் செலுத்தப்பட்டு வருகிறது அந்தந்த பகுதி நகர்மன்ற உறுப்பினர்களும் பொது மக்களும் இதற்கு ஆதரவு தர வேண்டும். என நகர மன்ற தலைவர் பேசினார். இதனை தொடர்ந்து பேசிய நகர் மன்ற உறுப்பினர்கள்.. நகராட்சி பகுதியில் தற்போது அதிக அளவிலான நல்ல தண்ணீர் விநியோகம் செய்யப்படுவதால் பல்வேறு இடங்களில் நல்ல தண்ணீரை வீணாக்குகிறார்கள் சில இடங்களில் பைப் உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஒப்பந்ததாரரிடம் கூறினால் நீங்கள் பைப் வாங்கித் தாருங்கள் நாங்கள் சரி செய்து தருகிறோம் என அலட்சியமாக பதில் கூறுகிறார்கள் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். நகர் மன்ற தலைவர்.. நகராட்சி அதிகாரிகளை வைத்து பேசி சரி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் மேலும் இது குறித்து அனைத்து மன்ற உறுப்பினர்களும் மீண்டும் ஒருமுறை அழைத்து பேசி குறைகள் நிவர்த்தி செய்யப்படும் என்றார். நகர் மன்ற உறுப்பினர்.. சிவன் கோவில் தெரு போலீஸ் லைன் தெரு உள்ளிட்ட பகுதிகளில் சாலை வசதிகளை சரி செய்வதோடு உப்பு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் பழுதான போர்வெல்லை சரி செய்ய வேண்டும் என்றார். நகர் மன்ற உறுப்பினர். பழனிச்சாமி நான்கு ஆண்டுகளாக நாலாவது வார்டு பகுதியில் சில கோரிக்கைகளை வைத்து வருகிறேன் தற்போது மழை காலம் எனது பகுதியில் உள்ள சாக்கடையின் மேல் புறத்தில் காங்கிரட் தளம் அமைக்க வேண்டும். மழைக்காலத்தில் சாக்கடை நீர் வீட்டிற்குள்ளே புகுந்து விடுகிறது அதனை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு தெருவில் லைட் வசதியே இல்லாமல் தற்போதும் மண்ணெண்ணெய் விளக்குகளை பயன்படுத்தி குடியிருந்து வருகிறார்கள் அவர்களுக்கு வீடுகளுக்கு வீட்டு வரி ரசீது உள்ளிட்ட வசதிகள் போடாததால் மின்சார இணைப்பு கிடைப்பதிலும் வேறு சலுகைகள் கிடைத்ததிலும் இடையூறுகள் உள்ளது இதனை சரி செய்ய வேண்டும். தெரு நாய்களின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது கோழிக்கடைக்காரர்கள் கழிவுகளை ஏறி உள்ளிட்ட சில இடங்களில் கொட்டுவதனால் கோழிக்கழிவுகளை தின்பதினால் நாய்கள் அதிகரிக்கிறது இதனை கட்டுப்படுத்த வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்து பேசிய நகர்மன்ற தலைவர்.. சாக்கடையின் மீது தடுப்பு கல்கள் அமைக்க டெண்டர் விடப்பட்டு விட்டது விரைவில் பணிகள் நடக்கும். நகராட்சியில் வரி போடுவதற்கு முறையான ஆவணங்கள் அவர்களிடம் இல்லாததால் ரசீது வழங்க இயலவில்லை இது நகராட்சி முடிவு எடுப்பது இல்லை மாவட்ட நிர்வாகம் சான்று வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் அதற்கு உண்டான நடவடிக்கைகள் எடுக்கப்படும் பழுதான ரேஷன் கடையை வேறு புதிய கடை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. நாய்களுக்கு ரேபிஸ் நோய் தடுப்பு ஊசி போடப்பட்டு வருகிறது என்றார். என்ன கூட்டத்தில் 19 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.