தூய்மை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு பணி தூய்மை பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்;
தருமபுரி பள்ளி கல்வி தூய்மைப் பணியாளர் சங்கம். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகில் நேற்று திங்கட்கிழமை மாலை ஆர்ப்பாட்டம். தருமபுரி கல்வி மாவட்டத்தில் அரசு பள்ளிகளான தொடக்கப் பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப்பள்ளி,மேல்நிலைப்பள்ளிகளில் பணி செய்யும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதா மாதம் சம்பளம் பணியாளர்களின் வங்கி கணக்கில் செலுத்த வேண்டியும், அடையாள அட்டை வழங்க, தினமும் வருகை பதிவேட்டில் கையொப்பம் பெற,தூய்மை பணி செய்ய உபகரணங்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.