திருவப்பூர் ரெயில்வே கேட் பகுதியில் நேற்று காலை கார் மீது தனியார் பஸ் பக்கவாட்டில் மோதியது. இதில் காரின் பக்கவாட்டில் சிறிது சேதம் ஏற்பட்டது. இதனால் கார் டிரைவர், பஸ் டிரைவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ரெயில்வே கேட்டின் பகுதியில் காரும், பஸ்சும் நடுரோட்டில் நின்றதால் மற்ற வாகனங்கள் செல்வதில் சிரமம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் அவர்களை சமாதானம் செய்து அனுப்பினர்.