டான் சிட்டி திருநெல்வேலி லயன்ஸ் கிளப் சார்பில் நேற்று நெல்லை சந்திப்பு ம.தி.தா இந்து கல்லூரியில் வைத்து ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின்பொழுது தமிழக அரசின் ராதாகிருஷ்ணன் விருது பெற்ற நல்லாசிரியர்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இதில் லயன்ஸ் கிளப் நிர்வாகிகள், ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.