ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை தீவிரம்

குமாரபாளையத்தில் ஆயுத பூஜை பொருட்கள் விற்பனை தீவிரமமாக நடந்து வருகிறது.;

Update: 2025-09-30 15:12 GMT
ஆயுதபூஜை இன்று கொண்டாடப்பட உள்ளது. இதற்காக குமாரபாளையம் மார்கெட் பகுதியில் பூஜை சாமான்கள், பூசணி, வாழை மரங்கள், மாவிலை, பொரி, கடலை, ஆப்பிள், திராட்சை, ஆரஞ்சு, கொய்யா, மாதுளை  உள்ளிட்ட கடைகள் அதிக அளவில் அமைக்கப்பட்டுள்ளது. குமாரபாளையம் நகரில் உள்ள விசைத்தறி கூடங்கள், கைத்தறி கூடங்கள், ஸ்பின்னிங் மில்கள், டபுளிங் மெசின் கூடங்கள், உள்ளிட்ட தொழில் நிறுவனங்களில் தூய்மை செய்யும் பணிகள் நடந்தது. இன்று நடக்கவிருக்கும் ஆயுத பூஜைக்கு பூஜை சாமான்கள் வாங்கி சென்றனர்.

Similar News