கரூர் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது

கரூர் துயரச் சம்பவம் பற்றி வதந்தி பரப்பியதாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டு கைது செய்யப்பட்டுள்ளார்.;

Update: 2025-09-30 18:21 GMT
கரூர் விவ​காரம் தொடர்​பாக சமூக வலை​தளங்​களில் வதந்தி பரப்​பிய​தாக பாஜக கலை மற்​றும் கலாச்​சார பிரிவு மாநில செய​லா​ளர் சகா​யம் (38), தவெக மாங்​காடு உறுப்​பினர் சிவனேசன் (36), அதே கட்​சி​யின் ஆவடி வட்​டச் செய​லா​ளர் சரத்​கு​மார் (32) ஆகிய 3 பேரை சென்னை போலீ​ஸார் கைது செய்​தனர். இதன் நீட்சியாக பிரபல யூடியூபர் ஃபெலிக்ஸ் ஜெரால்டும் கைது செய்யப்பட்டதாகத் தெரிகிறது. சென்னையில் உள்ள அவரது வீட்டில் இருந்து ஃபெலிக்ஸ் ஜெரால்டை போலீஸார் கைது செய்து அழைத்துச் சென்றனர். முதல்கட்ட தகவலில் கரூர் துயரச் சம்பவம் தொடர்பாக வதந்தி பரப்பியதற்காக ஃபெலிக்ஸ் கைதாகியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Similar News