புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் அடுத்த வடக்கூர் முத்துமாரியம்மன், கோவிலில் இன்று அக்டோபர் 1 புரட்டாசி புதன்கிழமை சரஸ்வதி பூஜை மற்றும் ஆயுத பூஜை முன்னிட்டு முத்துமாரி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும் அபிஷேகமும் நடைபெற்றது. இதில் ஆவுடையார் கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.