கீரனூர் அருகே உள்ள நல்லதங்காள்பட்டியை சேர்ந்தவர் பிரவீன்(27). திருச்சியில் கம்ப்யூட்டர் சர்வீஸ் செய்யும் வேலை பார்த்து வந்தார். திரும ணமாகி 9 மாதங்களே ஆகும் நிலையில் கணவன், மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனமுடைந்த பிரவீன் கடந்த வாரம் விஷம் குடித்தார். இதையறிந்த நண் பர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரி யில் சேர்க்கப்பட்ட நிலையில் அங்கு பிரவீன் உயி ரிழந்தார். கீரனூர் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.