புலியூர் தனியார் பள்ளியில் ஆயுத பூஜையில் கலந்து கொண்ட எம்பி
புலியூர் தனியார் பள்ளியில் ஆயுத பூஜையில் கலந்து கொண்ட எம்பி;
இன்று,ஆயுத பூஜை, சரஸ்வதி பூஜை முன்னிட்டு கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அருகே உள்ள புலியூரில் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மற்றும் பப்ளிக் பள்ளியில் இன்று மாலை பூஜைசரஸ்வதி, பார்வதி, லட்சுமி ஆகிய சுவாமி படங்களுக்கு மாலை அணிவித்து, பூஜை செய்து வழிபட்டு கொண்டாடினர். இதில் எம். பி. தம்பிதுரை கலந்து கொண்டு சிறப்பித்து அனைவருக்கும் அவல், பொரி, கடலை, மற்றும் பழங்கள் வழங்கினார். இதில் அரசம்பட்டி தென்னை செடி கென்னடி, வேளாங்கண்ணி பள்ளி கல்வி குழுமங்களின் தாளாளர் கூத்தரசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.