குடித்து விட்டு வரும் போது மின்மாற்றியின் மேடை மீது டூவீலரில் மோதி பெயிண்டர் பலி
குமாரபாளையத்தில் குடித்து விட்டு வரும் போது மின்மாற்றியின் மேடை மீது டூவீலரில் மோதி பெயிண்டர் பலியானார்.;
குமாரபாளையம் கம்பன் நகரில் வசித்து வருபவர் தமிழரசன், 18. பெயிண்டர். நேற்று மாலை 02:45 மணியளவில், சானார்பாளையம் கரும்புகாடு டாஸ்மாக்கில் மது வாங்கி குடித்து விட்டு, பஜாஜ் பல்சர் வாகனத்தில் வீட்டுக்கு வந்த போது, எம்.ஜி.ஆர். நகர் பஸ் நிறுத்தம் அருகே மின்மாற்றியின் மேடை மீது டூவீலருடன் மோதியதில் பலத்த காயமடைந்தார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவரை பரிசோதித்த டாக்டர், இவர் ஏற்கனவே இறந்து விட்டார் என்று கூறினார். இது குறித்து குமாரபாளையம் [போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.